வெங்காயம் பற்றி அறிந்திடாத தகவல்கள்...

undefined

வெங்காயத்தின் தாவரவியல் சிற்றினப்பெயர் அல்லியம் சீப்பா என்பதாகும்.
இது முதலில் லிலியேசி தாவரக் குடும்பத்திலும், பின்பு அல்லியேசி தாவரக்குடும்பத்திலும் வகைப்படுத்தப்பட்டது.
அல்லியம் என்ற சொல் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதற்கு தவிர்த்தல் என்பது பொருள்.
அல்லியம் 750 சிற்றினங்களை கொண்டுள்ளது. அதில் சிறப்பானது வெங்காயம்.
வெங்காயத்தின் ஆங்கிலப் பெயர் ஆனியன் என்பதாகும். இந்தச் சொல் தொடக்ககால ஆங்கிலச் சொல்லான உனியூன் என்பதில் இருந்தும் லத்தீன் சொல்லான உனியோ என்பதில் இருந்தும் பெறப்பட்டுள்ளது. இவற்றின் பொருள் ஒரே ஒரு குமிழை கொண்டது என்பதாகும்.
வெங்காயம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த தாவரம் ‘இராடம்' என்றும் ‘குரானசனம்' என்றும் ‘அச்சகம்' என்று மருத்துவத் தமிழிலும் அழைக்கப்படுகிறது.
வெங்காயம் தென் மேற்கு ஆசியாவிலோ, ஆப்கானிஸ்தானிலோ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கருதப்படுகிறது.
இது மத்திய ஆசிய மலைகளான டியன்ஸானில் முதன் முதலாக தாவரமாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
பண்டைய எகிப்தில் மிகப்பெரிய விருந்துகளில் வெங்காயம் உணவு மேசைகளில் வைக்கப்பட்டு இருப்பதை ஓவியங்களும், சித்திரங்களும் காட்சிப்படுத்துகின்றன.