சத்தான உளுந்தம் பருப்பு கருப்பட்டி கஞ்சி

Rebecca

எலும்புகளுக்கு பலன் தரக்கூடியது இந்த உளுந்தம் பருப்பு கருப்பட்டி கஞ்சி. இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
உளுந்தம் பருப்பு - ஒரு கப், கருப்பட்டி / வெல்லம் துருவியது - 1/2 கப், தண்ணீர் - 3-4 கப், பூண்டு - 2, தேங்காய் துருவியது - 1/4 கப், சுக்கு - சிறிய துண்டு, பால்- ஒரு கப் (தேவையென்றால்)
குக்கரில் உளுந்தம் பருப்பு, உரிச்ச பூண்டு, சுக்கு எல்லாம் போட்டு 15 நிமிஷம் வேக வைங்க. கருப்பட்டி / வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ளவும்.
உளுந்தம் பருப்பு நன்றாக வெந்தவுடன் அதில் காய்ச்சியி கருப்பட்டி / வெல்லம் பாகு, துருவின தேங்காயும் போட்டு 5 நிமிஷம் மறுபடியும் வேக விடுங்க.
தேவைபட்டால் காச்சின பாலையும் சேர்த்து 5 நிமிஷம் மறுபடியும் வேக விட்டு இறக்கி பரிமாறவும். * சத்தான உளுந்தம் பருப்பு இனிப்பு கஞ்சி ரெடி.