மாலை மலர்
தவெக தலைவர் விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பட்டு வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்றார்.
கையில் வேலுடன் சாமி தரிசனம் செய்த விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விஜய் வந்தது தெரிந்ததும் அதிகாலையிலேயே அங்கு ரசிகர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக பக்தர்கள் இறைவனை காண்பது தரிசனம். அதுவே கடவுள் பக்தர்களை பார்ப்பது தான் விஸ்வரூப தரிசனம். விஸ்வரூப தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகி யோகம் ஏற்படும் என்பதும் ஐதீகம்.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமான அமைய வேண்டி, தவெக சார்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து சென்னை திரும்பினார்.