திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...

Maalaimalar

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கேஎஸ்டி ஸ்பைஸ் கார்னரின் 15வது ஆண்டு விழா மற்றும் அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவில் திரிஷா கலந்துகொண்டார்.

தனக்கே உரித்தான ஸ்டைலில் நளினமாகவும் நேர்த்தியாகவும் அலங்கரித்திருந்தார்.

காப்பி நிற ஸ்லீவ்லெஸ் மிடி உடையை அணிந்து மிகவும் எளிமையான முறையில் வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், தமிழ் பேசுபவர்கள் இங்கு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஆங்கிலத்தில் பேசலாம் என்று நினைத்தேன், ஆனால் உங்கள் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. இது மிகவும் தூய தமிழ் என்றார்.

தனக்குக் கிடைக்கும் அன்பு மிகுந்த நெகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் கூறினார்.