ட்ரெண்டிங் பிளவுஸ் டிசைன்கள்...

Maalaimalar

போட் நெக்

கழுத்துப் பகுதி படகின் வடிவில் அகலமாகவும், ஆழம் குறைவாகவும் இருக்கும். காட்டன் புடவைகளுக்கு இது மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

பஃப் ஸ்லீவ்ஸ்

தோள்பட்டை மற்றும் கையின் விளிம்பில் சுருக்கங்கள் வைக்கப்பட்டு உப்பிய வடிவில் இருக்கும். பட்டுப் புடவைகள் மற்றும் பாரம்பரிய விசேஷங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

ஹை-நெக்

கழுத்து பகுதி முழுமையாகவோ (அ) காலர் போன்றோ மூடப்பட்டு இருக்கும். அலுவலக பணிக்கு ஏதுவாக இருக்கும்.

பேக்லெஸ்

பிளவுஸின் பின்புறம் துணி இல்லாமல் கயிறுகள் கட்டப்படும்படி இருக்கும். கவர்ச்சியாக இருக்கும் இவை, பார்ட்டிக்கும் மாடர்ன் புடவைக்கும் பொருத்தமாக விளங்கும்.

எம்பிராய்டரி

வண்ண நூல்கள் கொண்டு உருவாக்கப்படுவது. ஆரி ஒர்கின் முன்னோடி என்று இதை சொல்லலாம். பார்ப்பத்ற்கு எளிமையாகவும் மிடுக்காகவும் இருக்கும்.

கோல்ட்-ஷோல்டர்

பிளவுஸின் தோள்பட்டை பகுதியில், சிறிய வட்ட வடிவில் துணி இல்லாமல் கட் செய்யப்பட்டு இருக்கும்.

ஆரி ஒர்க்

சமீப காலமாக மிகவும் பிரபலமான ஒன்றாக ஆரி ஒர்க் செய்யப்பட்ட பிளவுஸ்கள் உருவெடுத்துள்ளது. திருமண விழாவின் மணப்பெண்கள் தேர்வு செய்யும் முக்கிய வடிவமாகும்.