கோடையில் சருமம் கருக்காமல் இருக்க...

மாலை மலர்

நாளொன்றுக்கு குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். அதிகம் காபி, டீ அருந்துவதை தவிர்ப்பதோடு, தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் மென்மையான பேஸ் வாஷ்களை பயன்படுத்தி தினமும் 2-3 முறை முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை, வெள்ளரிச்சாறு மற்றும் நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்துவது சருமத்துக்கு உடனடி ஆறுதலைத் தந்து, தோல் எரிச்சலைக் குறைத்து புத்துணர்ச்சியை வழங்கும்.

நேரடி வெயிலைத் தவிர்க்க அகலமான விளிம்புள்ள தொப்பிகள், தரமான கூலிங் கிளாஸ், ஸ்கார்ப் அல்லது குடையைப் பயன்படுத்துவதும் சருமத்துக்கு பாதுகாப்பாக அமையும்.

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.