தமிழ்நாடு, கேரளாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்!

Maalaimalar

உலகம் முழுவதும் முன்பை விட குறைவான குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

இந்தியாவில் பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்தல், திருமணம், குழந்தை பேறு தாமதம், வாழ்க்கை செலவு, குடும்பக்கட்டுப்பாடு அதிகரித்தல், பொருளாதாரச் சுமை போன்ற காரணங்களால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. இதன் விளைவாக, 2,050-க்கு பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் எண்ணிக்கை வேகமாக உயரும்.

பிறப்பு விகிதம் மிகவும் குறைந்த மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு உள்ளது.