இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Rebecca

இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.
அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.
ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.
தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories