இட்லிப்பொடி தயாரிக்கும்போது சிறிது கறிவேப்பில்லையை வறுத்து அரைத்து சேர்த்தால் மணமாகவும், பித்தத்தை போக்கவும் உதவும்..பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி மென்மையாக மாறும்..சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்..தோசைமாவு குறைவாக இருந்தால், அந்த அளவிற்கு அரிசி மாவு, தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நீர் விட்டு சிறிது நேரம் கழித்து ஆப்பம் ஊற்றலாம்..ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்..இட்லி மாவு அரைக்கும்போது சிறிது ஐஸ்வாட்டர் ஊற்ற இட்லி பஞ்சு போல் மிருதுவாக வரும்..பீர்க்கங்காயுடன் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், வதக்கி சட்னி செய்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்..தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories