அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்..தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது..மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்..கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்..சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்..மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது..அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது..வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது..பரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்..பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.