இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

undefined

அடை மாவு புளித்து விட்டால் இட்லி தட்டில் இட்லி போல் மாவை ஊற்றி 7 நிமிடம் வேக வைத்து பின்பு அதை உதிர்த்து கடுகு, மஞ்சள் தூள், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து சிறிது உப்பு போட்டு வாணலியில் வறுக்க சூப்பர் அடை காரபுட்டு ரெடி.
பலகாரம் செய்ய எண்ணெயை கொதிக்க வைக்கும்போது சிறிது இஞ்சியை அம்மியில் அல்லது மிக்சியில் நசுக்கிப் போட்டு உபயோகித்தால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையில் வாந்தி தலை, சுற்றல் வராது.
வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.
தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது காய்ந்ததும் பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.
பிடி கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளையும் வேக வைத்து அரிசி மாவை சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.
கோவைக்காயை கொதிநீரில் கொட்டி 5 நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் அரைத்துப்போட்டு புளித்த தயிர் கடைந்து கிளறி ஒரு நாள் ஊறவைத்து காய போட்டால் கோவைக்காய் வற்றல் ரெடி.
முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்நிறமாக வறுத்து மோர் குழம்பில் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும், வாசம் சூப்பராக இருக்கும்.
மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.