இந்த நடிகைக்கு தான் அழகு என்கிற திமிரு இருக்கு..! பார்த்திபன்
Rebecca
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும், முன்னணி நடிகையுமான வரலட்சுமி 'தி வெர்டிக்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
பட விழாவில் நடிகை சுஹாசினி பேசும்போது, "சின்ன வயதில் உங்கள் நடிப்பை பார்த்தேன் என்று பலரும் சொல்லும்போதெல்லாம், 'அவ்வளவு சீனியர் ஆகிவிட்டோமா?' என்று எண்ணத்தோன்றும். ஆனால் வயதாகிவிட்டதின் சிறப்பு அமெரிக்காவில் இருக்கும்போது புரிந்தது.
அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது, என் ரசிகை ஒருவர் எனக்காக, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சாப்பாடு செய்துகொண்டு வந்தார். அப்போதுதான் என் வயதின் முக்கியத்துவம் புரிந்தது'', என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து பார்த்திபன் பேசும்போது, 'எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினி தான். 28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்லமாட்டார்கள். ஆனால், தனது அழகின் மீது திமிரு கொண்டவர் சுஹாசினி', என்று குறிப்பிட்டார்.
அப்போது சுஹாசினி எழுந்து, 'எனக்கு 63 வயதாகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள்' என்றார். இதையடுத்து, 'பார்த்தீர்களா, இதுதான் திமிரு' என்றார் பார்த்திபன்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்--->
https://www.maalaimalar.com/web-stories