திருப்பதி கோவில் முன்பு போட்டோ ஷூட் நடத்திய அரசியல் பிரமுகர்: வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு

Santhya

தரிசனம் முடிந்து வெளியே வந்த வம்சி நாத் ரெட்டி கோவில் முன்பாக 4 போட்டோகிராபர்களை வைத்து போட்டோ வீடியோ ஷுட் நடத்தினார்.
தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இதனைக் கண்டு முகம் சுழித்தனர். இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள் போட்டோ ஷூட் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைக் கண்ட ஒரு சில பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். சமூக வலைதளங்களில் வம்சி நாத்ரெட்டிக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.