புற ஊதாக்கதிர்களிடம் இருந்து கண்களை பாதுகாப்பதற்கு சன் கிளாஸ் அணிந்துகொண்டு வெளியே செல்வது நல்லது..அதுபோல் கண்கள், கழுத்து பகுதியை மறைக்கும் விதமாக அகலமாக தொப்பியை அணிந்து கொள்வதும் பாதுகாப்பானது..சன் கிளாஸ் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் லென்ஸ்கள் பல கோணங்களில் இருந்து கண்களை பாதுகாக்க உதவும்..பச்சை, சிவப்பு நிறங்களை கொண்ட சன்கிளாஸ்கள் அணிவது நல்லது..அதில் இருக்கும் இருள் தன்மை கொண்ட லென்ஸ்கள் புற ஊதாக்கதிர் களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும்..வீட்டின் ஜன்னல்கள், கார் கதவுகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர் வீச்சை தடுக்கும் பிலிம்களை ஒட்டுவதும் நல்லது. அதுவும் கண்களுக்கு பாதுகாப்பு தரும்.