சூர்யாவின் Retro படத்தின் கண்ணாடி பூவே பாடல் வெளியானது
Rebecca
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலின் அப்டேட்டை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இப்பாடல் சூர்யா சிரையில் அவரது காதலியை நினைத்து பாடுவதுப்போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.