தேனின் மகத்தான மருத்துவ குணங்கள்...

Rebecca

பத்து கொன்றை மரப்பூக்களை 100 மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.
1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சை பழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்
இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும். பின்பு 1 ஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். 40 வயதை கடந்தவர்கள் தினமும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.
சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.
ஒரு மேஜைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.
நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.
தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories