தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங்..இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்..திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து வருகிறார்..சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரகுல் பிரீத் சிங்கிடம், ‘அளவான படங்கள் மட்டுமே நடித்து வருகிறீர்களே என்ன காரணம்? என்று கேட்கப்பட்டது..‘‘அப்படியா... இனிமேல் பாருங்கள் என் ஆட்டத்தை தொடர்ந்து படங்கள் நடிப்பதே என் திட்டம்..நல்ல கதைகள் தேர்வு செய்வதும் அவசியம். அந்தவகையில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும். கவலை வேண்டாமே என்று கூறி சிரித்தார்..ரகுல் பிரீத் சிங் தற்போது ‘இந்தியன்-3' மற்றும் இந்தியில் 2 படங்களில் நடித்து வருகிறார்..Explore