`தாதா' வேடத்தில் நடிக்கும் - ரஜினிகாந்த் 'புது அப்டேட்'
Santhya
இந்நிலையில் ரஜினி- 171 புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் மாபியா தாதாவாக நடிக்கிறார்
தங்கக் கடத்தல் அதிகமாக இருந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர், துபாய், உட்பட பிற நாடுகளில் இருந்து ரகசியமாக கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் இந்தியாவுக்கு புழக்கத்திற்கு வந்தது
அந்தநேரத்தில் விமான நிலைய பாதுகாப்பு , சோதனை முறையில் நவீன வசதிகள் இல்லாததால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை இதனால் தங்க கடத்தல் அதிகரித்தது
இந்த சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது இதற்கான 'ஸ்கிரிப்ட்' தயார் செய்யும் பணியில் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.