கோடைகாலத்தில் மாடித்தோட்டம் பராமரிப்பு

undefined

மாடித்தோட்டம் அமைப்பவர்கள், கோடைகாலத்தில் செடிகளை பாதுகாக்க மிகவும் சிரமம் அடைய வேண்டியது உள்ளது.
இயல்பாகவே மாடித்தோட்டங்களில் கோடை காலங்களில் காய்கறி, பழங்கள் சாகுபடி பாதிக்கப்படும். வெயிலின் தாக்கத்தால் செடிகள் காய்ந்து விடவும் வாய்ப்புள்ளது.
தண்ணீர் ஊற்றினாலும் விரைவில் ஆவியாகி, தொட்டிகளில் உள்ள மண் காய்ந்து விடுகிறது.
கோடைகாலத்தில் மாடித்தோட்டத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மாடித் தோட்டத்தில் தொட்டிகளை தனித்தனியாக வைக்காமல், ஒன்றுக்கு ஒன்று ஒட்டி இருக்கும் வகையில் நெருக்கி வைக்க வேண்டும்.
தண்ணீர் ஆவியாகி போகாமல் தடுக்க, காய்ந்த இலை தழைகளை கொண்டு செடிகளை சுற்றிலும் அடர்த்தியாக போட வேண்டும்.
இதனால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு, செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் அவற்றின் வேர்களுக்கு சென்றடையும்.
மாடித்தோட்ட செடிகளுக்கு நிழற்பந்தல் அல்லது நிழல் வலை அமைப்பதன் மூலம் வெப்பத்தின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.
கோடைகாலத்தில் செடிகளுக்கு திட உரங்களை பயன்படுத்துவதை விடவும், திரவ ஊட்டங்களாக கொடுப்பதே சிறந்தது.
திரவ ஊட்டங்களை செடிகள் விரைவில் எடுத்துக் கொள்ளும்.
செடிகளை புதிதாக நடுவது, வேர்களோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவது, செடிகளை கவாத்து செய்வது போன்றவற்றை கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories