Maalaimalar
டாட்டூ போடுவதற்கு நல்ல அனுபவம் வாய்ந்த டாட்டூ கலைஞரை தேர்ந்தெடுத்து, அவர் புதிய ஊசியை பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.
டாட்டூவுக்கு பயன்படுத்தும் மை தரமானதாக அதாவது உயர்தரத்தில் உள்ளதா? என்பதை அறிந்து கொள்வது நல்லது.
டாட்டூ ஊசிகளை முறையாக கிருமி நீக்கம் செய்யாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தும்போது பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊசிகள் கிருமி நீக்கம் செய்யாமல் பயன்படுத்துவதால் ரத்தம் வழியாக பரவக்கூடிய எச்.ஐ.வி., கல்லீரல் அழற்சி போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
ஒரு சிலருக்கு டாட்டூ போடும் போதே உடலில் வீக்கம், சீழ்பிடித்தல், கடுமையான அரிப்பு போன்ற உடனடி பக்கவிளைவுகள் ஏற்படும்.
குத்திய டாட்டூவை லேசர் சிகிச்சை மூலம் அழிக்க நினைத்தால், கருப்பு நிற டாட்டூவை எளிதாக அழித்துவிடலாம். ஆனால் மஞ்சள், பிங்க் போன்ற வண்ணமயமான டாட்டூக்களை அழிப்பது மிகமிக கடினம்.
முகத்தில் டாட்டூ போடும்போது நரம்புகள், கண்கள் பகுதிக்கு அருகில் ரசாயன மைகள் அலர்ஜியை ஏற்படுத்தினால் அது கடுமையான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
தரமற்ற மைகளால் உடல் முழுவதும் டாட்டூ போடுவதால் ஏற்படும் கடுமையான அலர்ஜி, வீக்கம் காரணமாக மூச்சுத்திணறல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம்.
சிலருக்கு டாட்டூவில் வெயிலில் செல்லும்போது, சூரிய ஒளியின் தாக்கத்தால் தோலில் கடுமையான அலர்ஜி ஏற்படும்.