Maalaimalar
வெல்லம், சுக்கு, ஏலக்காய் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படுவது. இனிப்பு, புளிப்பு என இருசுவையும் கலந்திருக்கும். உடனடி ஆற்றலைத் தரக்கூடிய பானம் ஆகும்.
மோர், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை கலந்து செய்யப்படுவது. இது உடனடியாக உடலை குளிர்வித்து குடற் புண்ணை குணமாக்க உதவும்.
நன்னாரி வேர்களில் இருந்து எடுக்கப்படும் பாகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மூலிகை பானம். இரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை நன்னாரிக்கு உண்டு. இதனால் முகப்பருக்கள் குறைந்து, தோல் ஆரோக்கியமும் பொலிவும் பெறுகிறது.
பனை மரத்தின் பாளையிலிருந்து இறக்கப்படும், இயற்கை தாதுக்கள் நிறைந்த ஒரு சுவையான இயற்கை பானம். வயிற்றுப் புண் குணமாகும், எலும்புகள் பலம் பெறும்.
புளித்த கம்பு மாவு, மோர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மெதுவாகச் செரிமானமாகி உடலுக்கு நீண்ட நேர ஆற்றலைத் தரும்.
காய்ச்சிய பால், பாதாம் பிசின் மற்றும் நன்னாரி சர்பத் சேர்த்து செய்யப்படும் மதுரையின் புகழ்பெற்ற இனிப்பு பானம். நீர் வறட்சியைத் தடுக்கும். இதில் உள்ள பாதாம் பிசின் உடலை குளிர்வித்து, உடலுக்கு வலுவை சேர்க்கிறது.