Maalaimalar
ராமநாதசுவாமி திருக்கோவிலின் உள்ளே அமைந்துள்ள பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி சேது பீடமாக விளங்குகிறது. இது திருமணத் தடைகளை நீக்கும் சக்தி வாய்ந்த தலமாகும்.
திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரி தேவி ஞானத்தின் வடிவமாக உள்ளாள்.
திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமுலை அம்மன் சன்னதி அருணை பீடமாக உள்ளது. 51 சக்தி பீடங்களுள் 8-ஆவது பீடமாகப் போற்றப்படுகிறது. மனித உடலின் மணிபூரகச் சக்கரத்தை குறிக்கிறது.
திருவாரூர் கமலாம்பாள் அன்னை யோக நிலையில் வீற்றிருக்கிறாள், ஞானத்தின் உச்ச வடிவமாக விளங்குகிறாள். கமலை பீடமாக இவ்வாலயம் வருகிறது.
கும்பகோணம் மங்களாம்பிகை கோவில் மந்திர சக்திகள் நிறைந்த விஷ்ணு சக்தி பீடமாக விளங்குகிறது.
காலனை வென்றவளாக திருக்கடையூர் அபிராமி அம்மன் விளங்குவதால் இத்தலம் கால பீடமாகும். எமபயம் போக்கும் கருணை வடிவமாக அம்மன் விளங்குகிறாள்.
கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் நாராயணி ஆலயம் சுசி பீடமாக விளங்குகிறது. இங்கு தேவியின் மேல் தாடைப் பற்கள் விழுந்ததாகக் கருதப்படுகிறது.
சிவபெருமானுடன் அன்னை நடனமாடிய இடம் திருவாலங்காடு மகாகாளி கோவிலாகும். இது காளி பீடமாக விளங்குகிறது.