மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய்...

Maalaimalar

சைதாப்பேட்டையில் உள்ள ஜோன்ஸ் சாலையில் எம்.சி. ராஜா சமூக நீதி விடுதி அமைந்துள்ளது. கல்லூரி மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் இவ்விடுதியில் தங்கி படித்து வருகினறனர்.

இவ்விடுதியில் உணவின் தரம் குறைவாகவும், சமையலறைகள் சுகாதாரமற்று இருப்பதும், தண்ணீர் பற்றாக்குறை, கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதும் மற்றும் பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.

இந்தச் சூழலில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, ​​அவர் விடுதியின் அடிப்படை வசதிகளைப் பரிசோதித்தார்.

மாணவர்களைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாணவர்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தார். 

மாணவர்கள் அளித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.