தமிழர்களின் பட்டையகெளப்பும் பாரம்பரிய தோற்கருவிகள்...

Maalaimalar

தவில்

நாதசுவரத்தின் முக்கிய பக்கவாத்தியமாக விளங்கும் உருளை வடிவ தோற்கருவி.

மத்தளம்

மிருதங்கத்தை விட சற்றே பெரிய உருளை வடிவக் கருவி. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத" என்ற நாச்சியார் திருமொழி பாடல் மூலம் இதன் பழமையை அறியலாம்.

மிருதங்கம்

இது 'இசைக்கருவிகளின் அரசன்' என்றும், 'மங்கல வாத்தியம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உடல் பகுதி பலா மரத்தின் நடுப்பகுதியைக் குடைந்து செய்யப்படுகிறது.

உறுமி மேளம்

கிராம தெய்வ வழிபாடுகளில் உறுமி மேளம் முதன்மையான இடம் பெறுகிறது. விலங்கு 'உறுமுவது' போன்ற தனித்துவமான ஒலியை எழுப்புவதால் இதற்கு 'உறுமி' என்று பெயர் வந்தது.

உடுக்கை

கையில் பிடித்து இசைக்கக்கூடிய சிறிய தோற்கருவி. இதன் நடுப்பகுதி சுருங்கியும், இருபுறமும் விரிந்தும் காணப்படும்.

பறை

தமிழர்களின் மிகத் தொன்மையான இசைக்கருவி. இது தகவல் தெரிவிக்கவும், கொண்டாட்டங்களுக்கும், வழிபாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.