சூர்யா 45 திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு மற்றும் மலையாள பிரபலங்கள்
Santhya
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கோவையில் நடைப்பெற்று வருகிறது.
படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , இந்திரன்ஸ், யோகி பாபு மற்றும் ஷிவாதா நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.
இதை தொடர்ந்து படத்தில் தெலுங்கு நடிகரான சுப்ரீத் ரெட்டி மற்றும் மலையாள நடிகையான அனகா மாயா ரவி இணைந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்