மாலை மலர்
வெயில் காலத்தில் பெண்கள் 'ஜீன்ஸ், லெக்கின்ஸ்' உள்ளிட்ட உடலை இறுக்கும் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
குளிர்பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும் என்பதாலும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களையும் தவிர்க்கலாம்.
தவிர்க்க இயலாமல் வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் வெளிர் நிற குடைகளை பயன்படுத்தலாம்.
குழந்தைகளை மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.
நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டரும், பெண்கள் 3 லிட்டரும் தண்ணீர் குடிக்க வேண்டும். நீச்சல் குளங்களுக்கு செல்லும்போதும் தண்ணீர் பருக வேண்டும். நீர் சத்து உள்ள பழங்கள், இளநீர், நுங்கு சாப்பிட வேண்டும்.