லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது..அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது..வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது..புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்..பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்..உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது..கட்லெட்டில் அதிக ருசி கிடைக்க அதற்குரிய மாவில் சிறிதளவு ரொட்டித் தூள் அல்லது ரவை சேர்க்க வேண்டும்..Explore