குழந்தைகளின் வலுவான பற்களுக்கு சில டிப்ஸ்...

Maalaimalar

தினமும் இருமுறை பல் துலக்கவும்

தினமும் காலை, இரவு என இரு வேளையும் பல் துலக்க வேண்டும்.

தினமும் ஃப்ளோஸ் செய்யவும்

குழந்தையின் பற்கள் ஒன்றையொன்று தொட ஆரம்பித்த உடன் ஃப்ளோஸ் செய்யத் தொடங்குகள். ஆனால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே இதைச் செய்யுங்கள்.

இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்

சர்க்கரை நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்வது பல் சொத்தை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே உறங்குவதற்கு முன் பழச்சாறு, சோடா, குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை கலந்த பால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

அடிக்கடி தண்ணீரால் வாய் கொப்பளிக்க சொல்லுங்கள்

ஃபுளூரைடு கலந்த நீர் பற்சிப்பியை வலுப்படுத்துவதோடு, உணவுத்துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கழுவி அகற்றவும் உதவுகிறது.

இரவில் பால் கொடுக்க வேண்டாம்

குழந்தை உறங்குவதற்கு முன் தண்ணீர் மட்டும் கொடுங்கள். பால், இனிப்பு, பழச்சாறு ஆகியவை இரவு முழுவதும் அதன் பற்களில் தங்கி, பற்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.

பல் மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனை

குழந்தையின் பற்களை நன்கு பராமரிக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.