தி ஸ்மைல் மேன் படத்தை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர் - சரத்குமார்
Santhya
இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.
"படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் நன்றி. குழுவினர் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். நல்ல முயற்சி.
எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி," என்று தெரிவித்தார்.