சிவனுக்கு பிடித்த மலர்கள்..

Maalaimalar

வில்வ இலை

சிவனுக்கு மிகவும் பிடித்தது. வில்வ இலை வைத்து பூஜித்து வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். வில்வ இலை இல்லாமல் சிவவழிபாடு முழுமை அடையாது.

ஊமத்தம் பூ

நோய் தீரும். சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

கொன்றை மலர்

தொழில் விருத்தி அடையும். வாழ்வில் மங்களம் உண்டாகும்.

தும்பைப் பூ

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் வரும். துன்பங்கள் உடனே விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

எருக்கு மலர்

எதிர்ப்புகள் விலகும். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களுக்கு விமோசனம் பெற எருக்கம்பூ மாலை சாற்றி வழிபடலாம்.

செண்பக மலர்

செண்பக மலர்களால் வழிபாடு செய்தால், கடன் தொல்லை நீங்கும்.

நாகலிங்கப்பூ

சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி நல்ல ஒரு அதிர்வலைகள் உண்டாகி செல்வமானது பெருகும்