மெதுவடை மொறு மொறு வென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்..கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது..பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்..வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது..தூண்களில் எண்ணெய் கறையோ கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் அதில் சிறிதளவு நீலகிரித்தைலம் விட்டு கழுவினால் அந்த கறை போய்விடும்..ஃப்ரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் அவற்றை மூடி வைக்க கூடாது..வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.