சாம்பாரில் புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். புளிப்பு சுவை குறைந்து சாம்பார் சுவையாக இருக்கும்..சாம்பாரின் சுவையை அதிகரிப்பதற்கு குழம்பை இறக்கும்போது 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்..பூண்டின் தோலை உரிப்பதற்கு முதலில் பூண்டை ஒவ்வொரு பற்களாக தனித்தனியாக எடுத்து கொள்ளவும்..பூண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சூடான தண்ணீரை ஊற்றி 3 நிமிடம் ஊற வைத்து பின்னர் பூண்டை உரித்தால் ஈசியாக இருக்கும்..பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்..ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்..கடைகளில் போடுவது போல டீ சுவையாக இருப்பதற்கு டீ தூளில் Instant Cofee தூளை கலந்து கொள்ளலாம்..எலுமிச்சம்பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்..பிஸ்கட் நமத்து போகாமல் இருப்பதற்கு ஒரு பாட்டிலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 3 லவங்கம் சேர்த்து பிஸ்கட்டை போட்டு வைத்தால் நமத்து போகாது..இட்லிக்கு அரைத்த மாவில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்..வெங்காய பக்கோடாவிற்கு மாவு செய்யும்போது அதில் வருத்த நிலக்கடலை பொடியை சேர்த்து மிக்ஸ் செய்தால் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும்.