தற்போது தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்..இன்று பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு "அட்மேன் சினி ஆர்ட்ஸ்" பெயரில் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதை அறிவித்துள்ளார்..அட்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் முதல் படம் சிம்புவின் 50-வது படமாகும். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது..இறைவனுக்கு நன்றி. அட்மேன் சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிப்பாளர் என்ற புதிய பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதைவிட சிறப்பாக இதனை துவங்க முடியாது. என் 50-வது படம், எனக்கும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் கனவு படம்..புதிய பயணம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் போல் உங்கள் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்..இதற்கிடையே சிம்பு பிறந்த நாளில், அவரின் 51-வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளது..ஏஜிஎஸ் தயாரிக்கும் சிம்புவின் 51-வது படத்திற்கு God Of love எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கிறார்.