பளபளக்கும் பட்டும் அதன் வகைகளும்...

Maalaimalar

மல்பெரி

மல்பெரி இலைகளை மட்டும் உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது உலகளாவிய பட்டு உற்பத்தியில் சுமார் 90% ஆகும். மிக மிருதுவான, மென்மையான மற்றும் பளபளப்பான தன்மை கொண்டது.

டஸ்ஸார்

காடுகளில் வளரும் புழுக்களில் இருந்து பெறப்படும் பட்டு. சற்று கரடுமுரடான அமைப்பைக் கொண்டிருப்பதோடு, இயற்கை தங்க நிறத்திலும் கிடைக்கிறது.

எரி பட்டு

புழுக்களைக் கொல்லாமல் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நட்பு 'அஹிம்சை' பட்டு.

முகா பட்டு

அசாமில் மட்டுமே விளையும். காலப்போக்கில் பளபளப்பு அதிகரிக்கும் பிரத்யேக பட்டு.

காஞ்சிபுரம் பட்டு

தூய மல்பெரி பட்டு மற்றும் தங்க ஜரிகை கொண்டு நெய்யப்படும் கனமான புடவை வகை. இது பாரம்பரியமாக கைத்தறியால் நெய்யப்படும் உலகப் புகழ்பெற்ற பட்டு வகையாகும். புவிசார் குறியீடு பெற்றது.

பனாரசி பட்டு

வாரணாசியில் மிக நேர்த்தியான தங்க மற்றும் வெள்ளி வேலைப்பாடுகளுடன் நெய்யப்படும் பட்டு. புவிசார் குறியீடு பெற்றது.