இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகின..மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்..இதனைத்தொடர்ந்து இன்று, இருவரும் தெலுங்கானாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனா்..சித்தார்த்-அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.