Maalaimalar
கூந்தலை வலிமைப்படுத்த உதவும் பயோட்டின், முட்டை, பாதாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மிகுந்துள்ளது.
உச்சந்தலை ஆரோக்கியத்திற்கும், கூந்தல் பளபளப்புக்கும் ஒமேகா-3 உதவிடும். சியா விதைகள், ஆளி விதைகள், சால்மன் மீன்கள் ஆகியவற்றை உட்கொண்டு வரலாம்.
இரும்பு உறிஞ்சுதலுக்கும், கொலாஜனை மேம்படுத்துவதற்கும் வைட்டமின் சி உதவிடும். முடியின் ஆரோக்கியத்தையும் காக்கும். அதற்கு ஆரஞ்சு, பப்பாளி, கிவி ஆகிய பழங்களை உட்கொள்ளலாம்.
கூந்தலின் மயிர்க்கால்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி செல்வதற்கு இரும்புச்சத்து தேவைப்படும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்தை பெறலாம்.
முடி வளர்ச்சிக்கும், முடியில் ஏற்படும் சேதத்தை சீர் செய்வதற்கும் துத்தநாகம் உதவிடும். பூசணி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது முடிக்கு பலம் சேர்க்கும்.