‘ஷிகெல்லா’ தொற்று - காரணங்களும் அறிகுறிகளும்

Maalaimalar

'ஷிகெல்லோசிஸ்' என்பது ஒரு வகை பாக்டீரியா கிருமியால் ஏற்படும் குடல் தொற்று நோய்.

ஷிகெல்லா தொற்று பெரும்பாலும் அசுத்தமான உணவு, தண்ணீர் அல்லது பாதிக்கப்பட்ட நபரின் தொடர்பு, மாசுபட்ட உணவு அல்லது குடிநீர், ஈக்கள் மூலம் பரவுகிறது.

ஷிகெல்லா தொற்றால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி அல்லது குமட்டல், உடல் சோர்வு ஆகிய பாதிப்பு ஏற்படும்.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஷிகெல்லா கிருமி தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய அளவில் மழைக்காலம் மற்றும் சுகாதார வசதிகள் குறைவான பகுதிகளில் ஷிகெல்லா தொற்றுகள் அடிக்கடி காணப்படுகின்றன.

கைகளை நன்றாக கழுவுதல், கொதிக்க வைத்த அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடித்தல், சுகாதாரம் பேணுதல் போன்றவற்றை கடைபிடித்தால் ஷிகெல்லா தொற்றை தவிர்க்கலாம்.