செல்வம் அருளும் சனி பிரதோஷம்

Maalaimalar

பிரதோஷ வழிபாடு என்பது சிவ வழிபாட்டில் மிக முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் பிரதோஷ நாள் வருகிறது.

அமாவாசை, பவுர்ணமிக்கு 3 நாட்களுக்கு முன் பிரதோஷம் வரும். ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ தினங்கள் வருகின்றன.

திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை 'பிரதோஷ காலம்'. சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் முழுவதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும்.

சனி பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் 5 ஆண்டுகள் ஆலயம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும், செல்வாக்கு உயரும், வறுமை நீங்கி, வசந்தம் உண்டாகும்.