Maalaimalar
உமிழ்நீரில் உள்ள அமைலேசு என்ற நொதிகள் நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தை ஜீரணிக்க உதவுகிறது.
உணவில் உள்ள சுவைகளை அறியவும், அவற்றை நாக்கில் உள்ள சுவை மொட்டுகளுக்குக் கொண்டு செல்லவும் உமிழ்நீர் உதவுகிறது.
உமிழ்நீர் வாயில் உள்ள அமிலங்களை நடுநிலைபடுத்தி சமநிலை படுத்துகிறது, மற்றும் பற்கள் சிதைவடைவதைத் தடுக்கிறது.
உமிழ்நீரில் ஆன்டிபயாடிக் மற்றும் கிருமிநாசினி பண்புகள் நிறைந்துள்ளன. இது ஈறு நோய்கள் மற்றும் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. உமிழ்நீரில் உள்ள சில வளர்ச்சி காரணிகள், வாயின் உட்பகுதியில் ஏற்படும் புண்களை விரைவாகக் குணப்படுத்த உதவுகின்றன.
கர்ப்பிணிகள், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு அதிகமாக உமிழ்நீர் சுரக்கலாம்.
தண்ணீர் பற்றாக்குறை அல்லது மருத்துவச் சிகிச்சை பக்கவிளைவுகளால் உமிழ்நீர் குறைவாகச் சுரந்து வாய் வறண்டு போகும். ஆன்டிஹிஸ்டமின்கள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இரத்த அழுத்த மருந்துகள் போன்றவையின் காரணமாக உமிழ் நீர் சுரைவாக சுரக்கும். நீரிழிவு நோய்,புகைப்பிடித்தல், புகையிலை மெல்லுதலும் காரணிகளாகும்.