சருமத்திற்கு பொலிவை சேர்க்கும் குங்குமப்பூ

Rebecca

குங்குமப்பூ உடலில் உள்ள வெப்பத்தை விரட்டியடித்து சருமத்திற்கு பொலிவை தரக்கூடியது.
வெப்பமான மாதங்களில் குங்குமப்பூவை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
குங்குமப்பூ எண்ணெய்யுடன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் சேர்த்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
இது சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.
ஒரு டீஸ்பூன் தேன் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிருடன் சிறிதளவு குங்குமப்பூ இழைகளை கலந்து பசை போல் குழைத்துக்கொள்ளவும்.
அதனை முகத்தில் தடவிவிட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்த பேஸ் மாஸ்க் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். சருமத்துக்கு கூடுதல் பிரகாசம் அளிக்கும்.