உடலில் வரும் வலியும்... அதன் காரணமும்...

Maalaimalar

நெற்றி வலி

பதற்றத்தால் ஏற்படும் தலைவலி, சைனஸ் அழற்சி அல்லது ஒற்றை தலைவலி காரணமாக நெற்றி பகுதியில் வலி ஏற்படலாம்.

கண்களின் பின்னால் வலி

கண் சோர்வு, ஒற்றை தலைவலி, சைனஸ் தொற்று அல்லது கண் அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

தாடை வலி

பல், ஈறு அல்லது தாடை மூட்டு பிரச்சனைகளால் தாடை பகுதியில் வலி ஏற்படலாம். சில நேரங்களில் இதய நோயின் இருக்கலாம். அறிகுறியாகவும் இருக்கலாம்.

கழுத்து வலி

தவறாக உட்காரும் முறை, தசைப்பிடிப்பு அல்லது கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக கழுத்து வலி ஏற்படலாம்.

தோள்பட்டை வலி

தசை இழுப்பு, அதிக வேலைப்பளு அல்லது மூட்டு பிரச்சனைகளால் தோள்பட்டை பகுதிகளில் வலியை உணரலாம்.

மார்பு வலி

அசிடிட்டி முதல் இதய நோய் வரை மார்பு வலிக்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். கடுமையான மார்பு வலியை அலட்சியம் செய்யக்கூடாது.

வயிற்றின் மேல் பகுதியில் வலி

அசிடிட்டி, வயிற்றுப் புண், பித்தப்பை அல்லது கணைய பிரச்சனைகளால் வயிற்றின் மேல் பகுதியில் வலி உண்டாகலாம்.

அடி வயிற்று வலி

குடல், சிறுநீர்ப்பாதை அல்லது இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்சனைகளால் வயிற்றின் அடிப்பகுதியில் வலி இருக்கலாம்.

பக்கவாட்டு வலி

தசைப்பிடிப்பு, சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக தொற்று காரணமாக இந்த வலி ஏற்படலாம்.

முதுகு வலி

தசைப்பிடிப்பு, தவறான உடல் தோரணை அல்லது முதுகுத்தண்டு பிரச்சனைகளால் முதுகின் கீழ் பகுதியில் வலி உண்டாகலாம்.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்