'ராமாயணா' ட்ரெய்லர் வெளியீட்டு விழா: சீதையாக வந்த சாய்பல்லவி!

Maalaimalar

'இராமாயண' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா டெல்லியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சாய் பல்லவி வருகை தந்தார்.

இப்படத்தில் சீதா தேவியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

பாரம்பரியமான மஞ்சள் மற்றும் ஊதா நிறப் பட்டுச் சேலையை அணிந்து வந்தார் சாய் பல்லவி.

நிகழ்ச்சியில் பேசுகையில், நடிகர்களுக்கு இது போன்ற வேடங்கள் கிடைப்பது எளிதல்ல. ஏனென்றால், ஒரு தேவியாக நடிப்பது சுலபமல்ல. அதை மிகச் சிறந்த படைப்பாக மாற்றுவதற்கு முழு மனதையும் ஆன்மாவையும் அர்ப்பணிக்க வேண்டும், என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் தன்னால் முடிந்தவரை தன்னை தூய்மையாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது கனிவான பேச்சாலும் நேர்த்தியான உடை மற்றும் பாவனையாலும் அனைவரையும் கவர்ந்தார்.