மாலை மலர்
தேவையான பொருட்கள்:-
ராகி மாவு- 2 கப், தேங்காய் துருவல் 2 மேஜை கரண்டி, கடுகு 1/2 மேஜை கரண்டி, பச்சை மிளகாய் 3 (சிறுதுண்டுகளாக நறுக்கவும்), உளுத்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி, பெருங்காயதூள் 1/4 தேக்கரண்டி, உப்பு- தேவைக்கு, நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி, கறிவேப்பில்லை- தேவைக்கு.
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து தேங்காய் துருவல், பச்சைமிளகாய், கறிவேப்பிலை வதக்கி, ராகி மாவு மற்றும் உப்பு கலந்து நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் ஒன்றரை கப் நீரை கொதிக்கவையுங்கள். அதை ராகி மாவு கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து கிளறுங்கள். பின்பு அப்படியே மூடிவைத்துவிடுங்கள்.
மாவு ஆறிய பின்பு நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி அடுக்கில் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இது சத்தான மாலை சிற்றூண்டியாக அமையும்.