அம்மாவாக 'ப்ரோமோட்' ஆனார் ராதிகா ஆப்தே - புகைப்படங்கள் வைரல்

Santhya

தமிழில் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் லண்டனை சேர்ந்த பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சிஸ்ட்ர் மிட்நைட்' திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கருவுற்று இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.