பசில் ஜோசஃப் நடித்த Maranamass படத்தின் ப்ரோமோ பாடல் வெளியீடு
Rebecca
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது.
அடுத்ததாக பசில் மரண மாஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு வித்தியாசமான ஃபன்கி ஹேர் ஸ்டைலுடன்,வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.
இப்படத்தை சிவபிரசாத் இயக்க கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார். டொவினோ தாமஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் ப்ரோமோ பாடலான ஃப்லிப் சாங் பாடலை வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்--->
https://www.maalaimalar.com/web-stories