கோடை காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்...

Rebecca

கோடை காலம் தொடங்கி விட்டது, வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டது. இச்சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், அதை எப்படிச் சமாளிப்பது? அதைப்பற்றி சற்று விவரமாகப் பார்ப்போம்.
தோல் தான் நமது உடலின் பெரிய உறுப்பாகும். உடலுக்கு கவசம் போல் வெளிக்காயம் வராமல், தோல் தான் நமது உடலைப் பாதுகாக்கிறது. வைட்டமின் டி உற்பத்தி செய்து உடல் எலும்பை உறுதியாக வைத்துக்கொள்கிறது. உடலுக்கு அழகை கொடுக்கிறது.
வியர்வை மூலம் உடல் சீதோஷ்ணத்தை சரிசமமாக வைத்துக் கொள்கிறது. அதிக வியர்வையினால், உடலிலுள்ள உப்பு மற்றும் நீர் அதிகமாக உடலில் இருந்து வெளியேறுவதனால் உடல் மிகவும் பலவீனம் அடையும்.
லேசாக களைப்பு, மயக்கம், தலைவலி, குமட்டல் போன்ற தொல்லைகள் தோன்றும். நாக்கு வறட்சி அடையும். சிறுநீர் செல்வது குறையும். நீர்க் கடுப்பும் சிலருக்கு உண்டாகும். உடலில் போதிய தண்ணீர் இல்லாததனால் மலச்சிக்கல் ஏற்படும். இரவில் தூக்கம் சரியாக இருக்காது.
சூரிய ஓளியில் உள்ள யு.வி கதிர்கள் தோல் மேல் தொடர்ந்து படும்போது தோல் நிறம் சிவக்கும், தோல் அரிக்கும் அல்லது தடித்துப்போகும் அதிகமாக வியர்த்து கொட்டும். அதனால் உடலில் அரிப்பு தோன்றும்.
முதுகு மற்றும் பல உடற்பாகங்களில் வியர்க்குரு தோன்றும். உடலின் பல பகுதிகளில் வேனல் கட்டிகள் எனப்படும் சிறு, சிறு கொப்பளங்கள் தோன்றும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இவை அதிகம் வர வாய்ப்புண்டு.
முகத்தில் உள்ள முகப்பரு அதிகரிக்க வாய்ப்புண்டு. தோல் வனப்பு குறைந்து, சுருக்கம் ஏற்படும். உடலில் பூஞ்சைக் காளான் நோய்த் தொற்று ஏற்படலாம். அது அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகமாகத் தோன்றும்.
வெயில் காலத்தில், அதிகமாக உடற்பயிற்சி செய்த பின்பு காலில் உள்ள ஆடு சதையில் அதிகமாக வலி உண்டாகும். உப்பு கலந்த தண்ணீரைக் குடித்தால் வலி உடனே சரியாகிவிடும். இத்தகைய தொல்லை வருபவர்களுக்கு, சிறிது உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், சதையில் வலி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories