Maalaimalar
'வாரணாசி' திரைப்படத்தை எஸ்.எஸ். ராஜமௌலி இயக்குகிறார்.
பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜமௌலி தனது சமூக வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். வாரணாசியில் மந்தாகினியாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா... என படத்தின் புகைப்பட தோற்றத்தை அவரது 44வது பிறந்தநாளை ஒட்டி வெளியிட்டார்.
அனல் பறக்கும் உருவமாகவும், கென்யாவின் மசாய் மாரா வனவிலங்குகளுக்கு மத்தியில் ஒரு மகிழ்ச்சியான சாகசப் பெண்ணாகவும் அவர் காட்சியளிக்கிறார்.
ருத்ராவாக மகேஷ் பாபுவும், வில்லன் கும்பாவாக பிருத்விராஜ் சுகுமாரனும் நடித்துள்ளனர். அவர்களுடன் ப்ரியங்கா சோப்ராவின் கதாபாத்திரமும் அடங்குகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 7, 2027 அன்று ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாக உள்ளது.