பிரதமர் மோடி திருமண வாழ்த்து-குஷியில் நடிகை ரகுல் ஜாக்கி தம்பதி

Santhya

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார் கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
அந்த கடிதத்தில் “திருமணத்திற்கு என்னை அழைத்ததற்கு நன்றி ஜாக்கியும் ரகுலும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்
இதற்கு நன்றி தெரிவித்து ரகுல் ப்ரீத் சிங் தனது எக்ஸ் தளத்தில் போஸ்டரை பகிர்ந்துள்ளார் மேலும் அந்த கடிதத்தை பிரேம் போட்டு வைத்து கொள்ள போவதாகவும் அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்