கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே இருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்..பாலக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தய கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்டவற்றில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது..ஃபோலிக் அமிலம் கீரையில் அதிகமாக இருப்பதாலேயே முடி வளர்ச்சியை அதிகரிக்க கீரை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது..மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்..ஃபோலிக் அமிலத்தை உற்பத்தி செய்து ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மாதுளை உதவும்..முட்டையில் புரதம் மட்டுமின்றி ஏராளமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. உங்களுக்கு பிடித்தமான வகையில் முட்டையை தயாரித்து சாப்பிடலாம்..முட்டை உங்களை நிறைவாக வைத்திருப்பதுடன் நாள் முழுக்க ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகிறது..வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஃபோலிக் அமிலம் குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும்..ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும்..வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி மாத்திரைகளை உண்ணலாம்..தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories/pregnancy-foods-part-1-872