மாதுளையில் அல்வா செய்யலாம் வாங்க...

Maalaimalar

தேவையான பொருள்கள்:

மாதுளை முத்துகள்-1 கப்

முந்திரி-50 கிராம்

கான்பிளவர்- 4 டீஸ்பூன்

நெய்- சிறிதளவு

சர்க்கரை- சிறிதளவு

முதலில் நெய்யில் முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

4 டீஸ்பூன் கான்பிளவரில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மாதுளை முத்துகளை அரைத்து வடிகட்டி, அதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்துக் கிளற வேண்டும்.

கலக்கி வைத்துள்ள கான்பிளவரை அதில் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவை கெட்டியான பதத்துக்கு வந்ததும், வறுத்த முந்திரியை இதில் சேர்த்துக் கிளறிவிட சுவையான மாதுளை அல்வா தயார்.